Home /News /tamil-nadu /

அருவியாய் கொட்டியும் நீர் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு.. ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு

அருவியாய் கொட்டியும் நீர் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு.. ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு

ஆயன்குளம் அதிசய கிணறு

ஆயன்குளம் அதிசய கிணறு

பெருமழை பெய்தபோதும், இதுவரை இந்த கிணறு நிரம்பி பார்த்தது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    திருநெல்வேலி ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணற்றை நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வளவு நீர் சென்றாலும்  நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து இதனைப் பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை  அடுத்த ஆயன்குளம் பகுதியில் தான் இந்த அதிசய கிணறு உள்ளது.

    கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்த்த பருவமழையின் காரணமாக கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து  தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி, 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போது கிணறு நிரம்பாமல் உள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    Also Read:  தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் கிடையாது - மின்வாரிய ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

    பெருமழை பெய்தபோதும், இதுவரை இந்த கிணறு நிரம்பி தாங்கள் பார்த்தது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் இந்த கிணற்றை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

     



    இந்நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர்களை கொண்ட  நிபுணர்கள் குழு இன்று  திசையன்விளை அருகே உள்ள  ஆயன்குளம் அதிசய கிணற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Heavy rain, Tamil News, Tirunelveli

    அடுத்த செய்தி