Home /News /tamil-nadu /

ஆதரவற்ற மக்களுக்கு கரம் கொடுத்த டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து

ஆதரவற்ற மக்களுக்கு கரம் கொடுத்த டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

சாலை ஓர மக்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் சாலை ஓரத்தில்  ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு  தொடர் மழையால் குளிரில் இருந்து பாதுகாக்கும் வகையில் போர்வை மற்றும் பனி குல்லாவை டிக் டாக் புகழ் ஜி பி முத்து வழங்கினார்.

    நெல்லையில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிக் டாக் புகழ் ஜி பி முத்து மழைக்காலத்தில் சாலை ஓரத்தில் வீடுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மழைக்காலத்தில் பயன்படும் படியாக போர்வைகள் மற்றும் பனி குல்லா வழங்கியுள்ளார். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு  போர்வைகளை வழங்கினார்.

    அப்போது டிக் டாக் புகழ் ஜி பி முத்துவை பார்த்த  பொதுமக்கள் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர் பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து  மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.   ஜி.பி.முத்து பேசுகையில் கூறுகையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை ஓரத்தில் ஆதரவற்று தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருவதாகவும்  அவர்களுக்கு போர்வை மற்றும் பனிக் குல்லா வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

    Also Read: இனி 1ரூபாய்க்கு தீப்பெட்டி கிடைக்காது.. தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு

    மேலும் சாலை ஓரங்களில் ஆதரவற்று தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.   நான் தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பதோடு என்னால் முடிந்த உதவியை செய்வேன் ஜாதி மத அரசியலில் தலையிடப் போவதில்லை. தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் முயற்சியில்  செயல்படுவேன் என்றார்.

    செய்தியாளர் : ஐயப்பன் ( திருநெல்வேலி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Nellai, Rain, Tamil News, Tik Tok, Tirunelveli

    அடுத்த செய்தி