Home /News /tamil-nadu /

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

டீ மாஸ்டர் கைது

டீ மாஸ்டர் கைது

கடையில் தேநீர் குடிக்க கூடியிருந்த மக்கள் மற்றும் முதல்வரை காண கடை வாசலில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து செல்லும்படி காவல்துறையினர் மிரட்டியதாக தெரிகிறது. கடை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த  டீ மாஸ்டர் முதல்வர் சென்ற கார் மீது டம்ளரை வீசியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தின் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். டீ குடிக்க நின்ற மக்களை போலீசார் விரட்டியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் சில்வர் குவளையை வீசியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைத்த அவர் தொடர்ந்து தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கிணறு எல்லையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நெல்லை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் வாகனம் வரும்போது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ்(குவளை) ஒன்றை எறிந்துள்ளார்.

மேலும் படிக்க: திமுகவைச் சேர்ந்த நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் பதவி விலகல் - விசிக ஏற்குமா?


பின்னர், அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்றில் ஏறி அவர் தப்பி சென்றார்.  சம்பவம் குறித்து அறிந்த திமுக பிரமுகர்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த கடையை மூட உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த தேனீர் கடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டதாகவும், கடையில் 2 தினங்களுக்கு முன்பு தான் டீ மாஸ்டராக பாஸ்கர் என்பவர் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.

பணகுடி போலீசார் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நாகர்கோவில் சென்ற அவர் மீண்டும் காவல்கிணறு வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீது குவளையை வீசியதாக பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரை  பணி செய்ய விடாமல் தடுத்தது  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்.. பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு..


பாஸ்கர் டீ மாஸ்டராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் அந்த கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். முதல்வர் வரவேற்பு இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த கடை இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. கடையில் தேநீர் குடிக்க கூடியிருந்த மக்கள் மற்றும் முதல்வரை காண கடை வாசலில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து செல்லும்படி காவல்துறையினர் மிரட்டியதாக தெரிகிறது. கடை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த  டீ மாஸ்டர் முதல்வர் சென்ற கார் மீது டம்ளரை வீச முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
Published by:Murugesh M
First published:

Tags: MK Stalin, Thirunelveli

அடுத்த செய்தி