திருநெல்வேலியில் உள்ள ஓட்டலில் சால்னாவில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் உணவருந்துவது வழக்கம். நேற்று வழக்கம் போல் நோயாளியின் உறவினர்கள் சிலர் ஹோட்டலில் உணவருந்தும் போது சால்னாவில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே தகவல் அறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரலிங்கம் விரைந்து சென்று கடையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைத்திருந்த சால்னா மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த குடி தண்ணீர் ஆகியவை உடனடியாக கீழே கொட்டினர்.
மேலும் கடையினை ஆய்வு செய்தபோது சுட்டி காட்டப்பட்ட பல்வேறு குறைகளை சரி செய்ய ஏதுவாக ஒரு நாள் முழுவதும் கடையை மூடவும் குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வு செய்தபின் கடையை திறக்கவும் அறிவுறுத்தினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரை காக்கும் அரசு மருத்துவனையின் எதிரேயே இதுபோன்று பொதுமக்களின் உயிரை பறிக்கும் வகையில் ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படும் சம்பவத்தால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களிடையே அச்சம் நிலவுகிறது.
-செய்தியாளர்: ஐயப்பன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.