ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மோடியால் முடியாததை ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார் - கே.எஸ்.அழகிரி புகழாரம்

மோடியால் முடியாததை ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார் - கே.எஸ்.அழகிரி புகழாரம்

மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

திமுக 100 நாள் ஆட்சி யில் எதையும் செய்யவில்லை என அதிமுகவினர் சொல்வது தவறு தற்போதைய பொருளாதார சூழ்நிலை நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மோடியால்  7 ஆண்டுகளாக குறைக்க முடியாத பெட்ரோல் வரியை ஸ்டாலின் குறைத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி வசந்தகுமார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்காக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர், ‘ தேசியத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முன்னாள் எம்பி எச்.வசந்தகுமார் எனவும் அவரது நினைவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போற்றுகிறது என தெரிவித்தார்.

  Also Read:  3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

  ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் குழுக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலில் செய்யப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி மிக பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

  திமுக 100 நாள் ஆட்சி யில் எதையும் செய்யவில்லை என அதிமுகவினர் சொல்வது தவறு எனவும் தற்போதைய பொருளாதார சூழ்நிலை தமிழக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார் எனவும் தெரிவித்தார். நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் தெளிவுபடுத்திய உள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  7 ஆண்டுகளாக பெட்ரோல் வரியை மோடியால் குறைக்க முடியாத நிலையில் ஸ்டாலின் அதனை குறைத்துள்ளார் இதற்காக காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆட்சியை பாராட்டுகிறது என தெரிவித்தார். கொடநாடு விவகாரத்தை விசாரிப்பதில் எந்த தவறுமில்லை கொடநாடு விவகார விசாரணைகள் எந்த உள்நோக்கமும் கிடையாது என தெரிவித்த அவர் கொடநாடு விசாரணை நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் அஞ்சத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

  செய்தியாளர்: ஐயப்பன் ( திருநெல்வேலி)

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Congress, DMK, K.S.Alagiri, News On Instagram, Petrol price, Tamilnadu