'காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின்' - நெல்லை கண்ணன் புகழாரம்
'காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின்' - நெல்லை கண்ணன் புகழாரம்
ஸ்டாலின், நெல்லை கண்ணன்
எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு காமராஜரைப் போல் முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிற ஸ்டாலின் அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின். நல்ல முதலமைச்சர் நிறைய முயற்சி செய்கிறார். அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நெல்லையில் பொறுநை நெல்லை ஐந்தாவது புத்தகத்திருவிழா நடத்தி வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக புத்தகக்கண்காட்சி என்றால் லட்சக்கணக்கான புத்தகங்கள் மட்டும் ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும்.
ஆனால் நெல்லை கண்காட்சியை மாபெரும் திருவிழாவாக நடத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். புத்தக திருவிழாவில் எழுத்தாளர்கள் தமிழ் அறிஞர்கள் கருத்தரங்கம் தினமும் நடைபெற்று வருகிறது. இன்று நெல்லை கண்ணன் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு காமராஜரைப் போல் முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிற ஸ்டாலின் அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் நல்ல முதலமைச்சர் நிறைய முயற்சி செய்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் குழந்தைகளை ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள். குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள். அவர்களை இந்தப் பள்ளி கூடங்கள் முளையிலேயே கருகிவிடும் என்றும் அதுபோல புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான். புத்தகம் என்பதே வடமொழி. இதனை படைப்பாளிகளின் சங்கமம் என அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். புத்தகத்திருவிழாவில் புத்தகத்தை வாங்க வேண்டும் அதனைப் படிக்க வேண்டும் எது தேவையோ அதை படிக்க வேண்டும் என பேசினார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.