ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருநெல்வேலியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

திருநெல்வேலியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

2.5 கிலோ நகைகளை மீட்டது காவல்துறை

2.5 கிலோ நகைகளை மீட்டது காவல்துறை

Thirunelveli | நெல்லையில் மைதீன்பிச்சை என்ற நகைக்கடை உரிமையாளரை தாக்கிய கொள்ளையர்கள் 5 கிலோ தங்க நகையை பறித்துச் சென்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நெல்லை அருகே வீரவநல்லூரில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி விட்டு 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீரவநல்லூரில் கடந்த 11 ஆம் தேதி இரவு மைதீன்பிச்சை என்ற நகைக்கடை உரிமையாளரை தாக்கிய கொள்ளையர்கள் 5 கிலோ தங்க நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஏ.எஸ்.பி மாரிராஜன் தலைமையிலான 6 தனிப்படை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது அப்பகுதியில் ஒருவர் அதிகளவில் செல்போன் பேசியதை வைத்து, அந்த நபர் பற்றி போலீசார் விசாரித்தபோது அது வீரவநல்லூரை அடுத்த பாறையடி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதாகர் என்பது தெரியவந்தது.

Also read... அம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சம் மூன்றே நாட்களில் மீட்பு - போலீசார் துரித நடவடிக்கை...

அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது மாணவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஐயப்பன், மருதுபாண்டி, அழகுசுந்தரம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழாக்களில் இசைக்கப்படும் வாத்தியக் கருவியான டிரம்ஸ்களில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ நகையையும் போலீசார் மீட்டுள்ளனர்.

-செய்தியாளர்: ஐயப்பன்.

First published:

Tags: Gold Theft, Thirunelveli