ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான மணல் கடத்தப்பட்டதாக புகார்; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான மணல் கடத்தப்பட்டதாக புகார்; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான மணல் கடத்தப்பட்டதாக புகார்; சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான மணல் கடத்தப்பட்டதாக புகார்; சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு கட்டுமான பணிகளுக்கு பூமியைத் தோண்டியபோது கிடைத்த மணலை கேரளாவுக்கு கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட சந்திப்பு பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 79 கோடி மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் புதிதாக பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

Also read: தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை!

கடந்த 2019ஆம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கியது தற்போது வரை பணிகள் முடிவடையாமல் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் திருநெல்வேலி பழைய பேட்டையைச் சேர்ந்த சுடலை கண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது.

கட்டுமானப் பணிகளுக்காக பூமியை தோண்டியபோது ஆற்றுமணல் கிடைத்தது. தாமிரபரணி ஆற்று படுகையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்தப் பேருந்து நிலையம் அமைந்திருப்பதால் ஏராளமான மணல் கிடைத்ததாகவும் அதனை பொருட்காட்சி மைதானத்தில் கொண்டு சென்று வைத்ததாக முதலில் அதிகாரிகள்  தெரிவித்தனர். ஆனால் அங்கேயும் மணலை காணாத நிலையில் சுமார் 100 கோடி மதிப்பிலான மணலை கேரளாவுக்கு கடத்தியதாக தெரிய வருகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அவர் திருநெல்வேலி சந்திப்பு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழக அரசு மற்றும் 10 நபர்களை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார் சுடலைக்கண்ணு.

பேருந்து நிலைய பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பணிகள் துவங்கிய போது திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்தவர், வழக்கு தொடர்ந்த நேரத்தில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த கண்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி நாராயணன் நாயர், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், தச்சநல்லூர் உதவி ஆணையர் ஐயப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் திருநெல்வேலி வட்டாட்சியர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் இன்று  வந்தது.

வழக்கு பதிவு செய்திருந்த சுடலைக்கண்ணுவின் வழக்கறிஞர் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயமாக நடக்காது எனவே சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே ஸ்மார்ட் சிட்டி பணிகளை கவனித்து வந்த தலைமை செயல் அதிகாரி நாராயணன் நாயர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு ஆணையராக ஓராண்டிற்கு மேல் பணியாற்றியவர் மாநகர பொறியாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டியின் தலைமை செயல் அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் தனது பதவிக்காலம் முடியும்  முன்னதாகவே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துவிட்டார். உடல்நிலையை கருத்தில்கொண்டு ராஜினாமா செய்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மணல் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது அவர் ராஜினாமாவிற்கும் வழக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. விரிவான விசாரணை நடத்தப்பட்டால் எவ்வளவு மணல் அல்ல பட்டுள்ளது என்பது குறித்தும் எங்கே கடத்தப்பட்டது என்பது குறித்தும் தெரியவரும்.

செய்தியாளர் - சிவமணி

Published by:Esakki Raja
First published:

Tags: Nellai, Tirunelveli