Home /News /tamil-nadu /

இளைஞரை திருமணம் செய்த திருநங்கையை அடித்து உதைத்த உறவினர்கள்... நெல்லையில் பயங்கரம்

இளைஞரை திருமணம் செய்த திருநங்கையை அடித்து உதைத்த உறவினர்கள்... நெல்லையில் பயங்கரம்

நெல்லை செய்திகள்

நெல்லை செய்திகள்

Nellai District : இது குறித்து திருநங்கை உதயா பழவூர் காவல் நிலையத்தில்  புகாரளித்துள்ளார். மேலும் தன் மீதான தாக்குதலுக்கு காதல் கணவரும் காரணம் என்ற  அவரது புகாரின் அடிப்படையில் பால ஆனந்த், பாலமுருகன், லெட்சுமி, ,  சக்திவேல்,  மணிகண்டன், ஆகியோர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    நெல்லையில் தன்னை விட குறைவான வயது உடைய ஆணை திருமணம் செய்த திருநங்கையை உறவினர்கள் அடித்ததாக திருநங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நெல்லை மாவட்டம்  பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கரையடி காலனியை சேர்ந்தவர் திருநங்கை உதயா. அவருக்கு வயது 28. இவர் தற்போது பழவூரில் வசித்து வருகிறார். இவருக்கும் கூடன்குளம் அருகே உள்ள ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த பால ஆனந்த் வயது 19  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்பு பழக்கம் படிப்படியாக  காதலாக மாறியுள்ளது.

    இந்த நிலையில்  ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. 23.03.22ம் தேதி பாலஆனந்த் உதயாவை தேடி பழவூர் வந்துள்ளார். இதனையறிந்த பால ஆனந்தின் அப்பா பாலமுருகன்,  தம்பி சுபாஷ் மற்றும் உறவினர்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் சிலர் காரில் பழவூருக்கு வந்து அங்கு  இருந்த  பாலஆனந்த் மற்றும் திருநங்கை உதயா ஆகிய இருவரையும் காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

    பின்பு திருநங்கை உதயாவை கூடன்குளம் பகுதியில் விட்டுவிட்டு மகன் பாலஆனந்தை அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருநங்கை உதயாவை, பால ஆனந்த்  உறவினர்கள் மீண்டும் வந்து  அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் திருநங்கைக்கு பலத்த காயம் முகம் மற்றும் உடலில் ஏற்பட்டு உள்ளது.

    ALSO READ |  ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றம்... தடுக்க முடியாமல் கதறி அழுத பெண்கள்
     

    இதனையடுத்து தன்னை அடித்ததாக கூடன்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக திருநங்கை சென்ற நிலையில் அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காயம் அதிகமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    உதயாவிற்கு இடதுகண் கீழே வீக்க காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருநங்கை உதயா பழவூர் காவல் நிலையத்தில்  புகாரளித்துள்ளார். மேலும் தன் மீதான தாக்குதலுக்கு காதல் கணவரும் காரணம் என்ற அவரது புகாரின் அடிப்படையில் பால ஆனந்த், பாலமுருகன், லெட்சுமி, சக்திவேல், மணிகண்டன், ஆகியோர்கள் மீது 74/22 U/s 147,294(b), 323,355,506 (i) IPC பிரிவுகளின்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பழவூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் : P.S. சிவமணி.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Nellai

    அடுத்த செய்தி