• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CBCID Investigation | பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்

CBCID Investigation | பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்

பாளை சிறையில் விசாரணை கைதி கொலை

பாளை சிறையில் விசாரணை கைதி கொலை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • Share this:
    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 22-ஆம் தேதி கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்து மனோ என்ற கைதி அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பாளையங்கோட்டை சிறைச்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முத்து மனோவின் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய போது, மத்திய சிறை கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

    இதனிடையே, விசாரணையின் அறிக்கையில் கொடுக்கப்படும் தகவல் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக நெல்லை மாவட்டம் வாகைகுளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த முத்து மனோவின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... கரும்பு அரவை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.. பெரம்பலூர் விவசாயிகள்

    தொடர்ந்து நான்காவது நாளாக சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் விசாரணை கைதி முத்துமனோ கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை காவல் ஆணையரின் பரிந்துரையின்பேரில் டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    செய்தியாளர்: ஐயப்பன், பாளையங்கோட்டை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: