நெல்லையில் 5-வது புத்தக கண்காட்சி தொடங்கியது 126 அரங்குகளில் 150 பதிப்பகங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. சிறப்பு அம்சமாக தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் பண்டையகால பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பப்பாசி அமைப்பு சார்பில் நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடைபெற்று வந்தது கொரனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தக திருவிழா நடைபெறவில்லை. பரவல் குறைந்ததால் இந்த ஆண்டு 5வது புத்தக கண்காட்சியை பொருநை நெல்லை புத்தக திருவிழா என்ற பெயரில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மார்ச் 17-ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மேயர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் பல்வேறு துறைகளின் கீழ் 1 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன இதையொட்டி கண்காட்சியில் 126 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் குறித்த புத்தகங்கள், தலைவர்களின் வரலாறு, போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புத்தக திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது அதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த கண்காட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இம்முறை 3 கோடி ரூபாய்க்கு குறையாமல் விற்பனை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. சிறப்பு அம்சமாக அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கைப்பட வரைந்த ஓவியங்கள் மற்றும் கையேடுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் பயன்டுத்திய ஈமச்சடங்கு பொருட்கள் முதுமக்கள் தாழிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இவை அனைத்தையும் கண்காட்சிக்கு வந்திருந்த அனைத்து சிறப்பு விருத்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் வியப்புடன் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை வகுப்புகளும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக பள்ளி மாணவர்கள் 11 நாட்கள் தொடர் வாசிப்பு சாதனை முயற்சியும் நடைபெற்றது.
பின்னர் நடந்த விழாவில் கண்காட்சி பாடல் வெளியிடப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க மண் இந்த நெல்லை மண், பல்வேறு இலக்கியவாதிகள், வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், ஒண்டிவீரன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். பத்திரிகை உலகின் ஜாம்பவன்களும் இம்மண்ணில் பிறந்தவர்கள் தான், சமஸ்கிருதம் தான் ஆதி நூல் சமஸ்கிருதம் தான் ஆதி மதம் என்பதை உடைத்து இது திராவிட நாகரீகம் என்று முதலில் சுட்டி காட்டிய கார்டுவெல் வாழ்ந்த மண் திருநெல்வேலி.
Also Read: பாஜகவின் இந்த விமர்சனம் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறந்த பாராட்டு.. உதயநிதி ஸ்டாலின்
1977- ம் ஆண்டு தென்னிந்திய புத்தக கண்காட்சி நடைபெற்றது, அப்போது 22 அரங்குகள்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்தியாவே வியக்கும் வகையில் சென்னையில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் புத்தக கண்காட்சியை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, 15 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், இதன் மூலம் தமிழகத்தில் மக்களின் வாசிப்புத்திறன் அதிகமாக உள்ளது என்பதை உணர முடிகிறது.
தந்தை பெரியார் , அண்ணா, கலைஞர், ஆகியோரை பின்பற்றி பட்டி தொட்டியெல்லாம் கல்வி உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. சென்னை அண்ணா நூலகம் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் ஆகியவை தமிழக மக்களின் வாசிப்பு திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது. நெல்லை புத்தக கண்காட்சிக்கு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாசிப்பு திறனை மேம்படுத்த மட்டுமல்ல நாள்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்களும் நடத்தப்படுகிறது. நெல்லை மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த புத்தத கண்காட்சி உதவும் என்றால் அது மிகையல்ல.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book Fair, Book for students, Book reading, Book release, Nellai, Thirunelveli