ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லையில் தொடரும் சமுதாயப் படுகொலைகள்.. ரவுடிகள் பட்டியல் தயார்.. ஆக்‌ஷனில் இறங்கிய தனிப்படை

நெல்லையில் தொடரும் சமுதாயப் படுகொலைகள்.. ரவுடிகள் பட்டியல் தயார்.. ஆக்‌ஷனில் இறங்கிய தனிப்படை

நெல்லை

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சமுதாயப் படுகொலைகள் தடுக்க தீவிர நடவடிக்கை. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சமுதாயப் படுகொலைகள் தடுக்க தீவிர நடவடிக்கை. ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக படுகொலைகள் அதிகரித்து வருகிறது கடந்த ஒரு மாதத்திற்குள் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் வெவ்வேறு சமுதாயங்கள் இடையே இந்த கொலைகள் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றடைப்பு அருகே வாகை குளத்தைச் சேர்ந்த முத்து மனோ என்ற சிறைவாசி பாளையங்கோட்டை மத்திய சிறை குள்ளேயே ஏழு பேர் கொண்ட சிறைவாசிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

Also Read:  கோவையில் சிறுவர்களுக்கு போதை ஊசி பழக்கத்தை ஏற்படுத்த இளைஞர்கள் முயற்சி - கார் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல்

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதற்குப் பழிக்குப் பழி வாங்கும் விதமாக கட்டிட ஒப்பந்தகாரர் கண்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். முத்து மனோவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது தவிர காண்ட்ராக்டர் கண்ணனுக்கும் முத்து மனோ குடும்பத்திற்கும் நேரடி தொடர்போ தகராறு இருந்ததில்லை  அந்த சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை பழிவாங்கும்  நோக்கில் இந்த படுகொலை நடைபெற்றதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவை தவிர நகை பணத்திற்காக கொலை குடும்ப கௌரவத்திற்காக கொலை என பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.இதனையடுத்து தென் மண்டல ஐஜி அன்பு தலைமையிலான காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.

Also Read:  உதடுகள் தைக்கப்பட்டு கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட முதியவர் - வளர்ப்பு மகனின் கொடூர செயல்

குற்றச் சம்பவங்களில் அவர்கள் தற்போதும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை சென்ற தனிப்படையினர் கோழி அருள் என்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது பசுபதி பாண்டியனை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.அவர் சில தினங்களுக்கு முன்பு காவல் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே காண்ட்ராக்டர் கண்ணனை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் கட்டுடையார் குடியிருப்பைச் சேர்ந்த இசக்கி முத்து (எ) மொங்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை தவிர ரவுடிகள் பட்டியலில் உள்ள 10 பேர் கஞ்சா கடத்தியவர்கள்  மற்றும் பல்வேறு குற்ற செயல்களில்  தொடர்புடைய 56 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  அவர்கள் மீது 38 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே சமுதாய கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பதட்டமான நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் அதுபோன்ற சூழல் ஏற்படாவண்ணம் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Nellai