ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைக் காலத்தில் கவனம்.. செய்யக் கூடாதவை என்னென்ன - பட்டியல் இதோ

மழைக் காலத்தில் கவனம்.. செய்யக் கூடாதவை என்னென்ன - பட்டியல் இதோ

மழைக் காலத்தில் செய்யக் கூடாதவை

மழைக் காலத்தில் செய்யக் கூடாதவை

மழை காலத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலையில், செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

  இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் துரிதமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

  இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மக்களுக்கு மழை தொடர்பாக எச்சரிக்கை விழிப்புணர்வு தகவலை வெளியிட்டுள்ளது. மழை காலத்தில் மக்கள் செய்யக் கூடாதவை என்ன என்ற விழிப்புணர்வு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு:

  • ஈரமான துணிகளை உலர்த்துவதற்காக மின்கம்பங்களில் கயிறு கட்ட வேண்டாம்
  • குளியலறைகள், கழிப்பறைகள், பிற ஈரமான இடங்களில் கைகளைக் கொண்டு சுவிட்சுகளை தொட வேண்டாம்
  • மின்கம்பங்கள், கம்பிகளில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம்
  • பந்தல்கள், விளம்பரப் பலகைகளைக் கட்ட மின் கம்பங்கள் பயன்படுத்த வேண்டாம்
  • மின்மாற்றிகள், மின் தூண் பெட்டிகள், மின்கம்பங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்
  • மின்னல், இடியின் போது மின் சாதனங்கள் மற்றும் தொலைப்பேசிகளைப் பயன்படுத்த வேண்டாம்
  • இடி, மின்னலின் போது திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்
  • ஷார்ட் சர்க்யூட் அல்லது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை அணைக்கவும்

  Published by:Kannan V
  First published:

  Tags: Police, Rain, Rainfall, Tirunelveli