பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்... திருநெல்வேலியில் பரபரப்பு
பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்... திருநெல்வேலியில் பரபரப்பு
திருநெல்வேலியில் பரபரப்பு
Tirunelveli District | பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருநெல்வேலியில் பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை.
சிசிடிவி காட்சியை ஆய்வு செய்யும் காவல்துறையினர்
இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. 20 பேருந்துகள் வரை நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமாக இருந்த இந்த பாளையங்கோட்டை பேருந்து நிலையம் தற்போது கட்டிடமாக மாறியுள்ளதால் பேருந்து நிறுத்தமாக சுருங்கியுள்ளது.
மர்மநபர் குறித்து அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை.
இதனால் வெடிகுண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து நிலையத்திலும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருந்தும் நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் யார் ? எங்கு தயாரித்தார் ? இதனை வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா ஞாயிறு பகலில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கும் வெடிகுண்டு வீச்சு இருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.