Home /News /tamil-nadu /

கோடை வெப்பத்தால் காரின் மேல் தென்னந்தட்டி கூரையுடன் உலா வரும் முதியவர்

கோடை வெப்பத்தால் காரின் மேல் தென்னந்தட்டி கூரையுடன் உலா வரும் முதியவர்

தென்னந்தட்டி கூரையுடன் உலா வரும் முதியவர்

தென்னந்தட்டி கூரையுடன் உலா வரும் முதியவர்

Summer 2022 | திருநெல்வேலியை சேர்ந்த முதியவர் ஒருவர் வெளுத்து வாங்கும் கோடையின் கொடூர பிடியில் இருந்து தப்பிக்க தனது இண்டிகா காரின் மேல் கூரையின் மீது தென்னந்தட்டி வைத்து உள்ளார்.

    கோடையை சமாளிக்க காரின் மேல் கூரையின் மீது தென்னந்தட்டி வைத்து அதன் மூலம் குளிர்ச்சி ஏற்படுவதாக கூறும் முதியவர் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கோடை வெப்பத்தை தணிக்க பலரும் எலுமிச்சை சாறு, பழங்கள், வெள்ளரி , தர்பூசணி என குளிர்ச்சியான உணவு முறைகளையும் ஆறுகள் , அருவிகள் , மலை பிரேதேசங்கள் என பூமியின் குளிர்ந்த பகுதிக்கும் படையெடுத்து வருகின்றனர். சிலர் வீட்டின் மேற்கூரையை குளிர்வித்தல் , மொட்டை மாடியில் மாலை நேரம் நீர் தெளித்தல் என வெப்பத்தின் தாகம் தணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க முதியவர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இண்டிகா காரின் மேல் கூரையின் மீது தென்னந்தட்டி வைத்து உள்ள சம்பவம் நடந்துள்ளது. கோடையின் கொடூர பிடியில் இருந்து தப்பிக்க தனது மனைவிக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக முதியவர் தெரிவித்துள்ளார்.



    திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஜமீன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது 78). இவர் நெடுஞ்சாலை துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு‌ பெற்றுள்ளார். இவருடைய மனைவி பார்வதி. இவர் தற்போது வெளுத்து வாங்கும் கோடையின் கொடூர பிடியில் இருந்து தப்பிக்க தனது இண்டிகா காரின் மேல் கூரையின் மீது தென்னந்தட்டி வைத்து உள்ளார்.

    இதையும் படியுங்கள் | கோவை மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலம் மீட்பு

    தனக்கும் தன் மனைவிக்கும் கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க இயற்கை முறையில் நிழல் அமைத்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சாலையில் உலா வருகிறார்.



    இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் தன்னை பொறுத்தவரை இயற்கை முறையில் எனக்கும் என் மனைவிக்கும் குளிர்ச்சி தருகிறது என கூறுகிறார். இவரின் இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : ஐய்யப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Summer Fashion, Tirunelveli

    அடுத்த செய்தி