ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லை : பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நெல்லை : பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விபத்தின்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தின்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தின்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நெல்லை பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் எம். இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, விபத்தின்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : நெல்லை : இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை - மாணவர்கள் குற்றச்சாட்டு

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பள்ளியில் மகனை இழந்த பெற்றோர்கள், கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

இதையும் படிங்க : 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் - அரசாணை வெளியீடு

First published:

Tags: Tirunelveli