ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லையில் அதிகாரிகள் அஜாக்கிரதை; பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்!

நெல்லையில் அதிகாரிகள் அஜாக்கிரதை; பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்!

பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

நெல்லையில் அதிகாரிகள் அஜாக்கிரதையால், பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லையில் அதிகாரிகள் அஜாக்கிரதையால், பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைத்து கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலைியல் தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் அந்த பாறையைத் தகர்ப்பதற்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதான சாலை அருகில் இருந்தும், எந்தவித பாதுகாப்பு ஏற்படும் செய்யாமல், அஜாக்கிரதையாக பாறையில் வெடிவைத்து வெடிக்கச் செய்தனர்.

  இதில் வெடி பயங்கரமாக வெடித்து பாறைகள் சிதறியதில் பெரிய கல் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது. இதில் ஆட்டோவின் மேல் பகுதி கிழித்துக்கொண்டு  ஆட்டோவின் உள்ளே விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.

  எனினும், ஓட்டுனரின் மீது கல் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். வெடி வெடித்த நேரத்தில் பேருந்துகள், கார் ஏதாவது சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து, காயமடைந்த ஓட்டுனர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் - ஐயப்பன்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Auto, Nellai, Thamirabarani