ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளக்காதலனுடன் சிக்கிய மாமியார்.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற மருமகன்

கள்ளக்காதலனுடன் சிக்கிய மாமியார்.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற மருமகன்

நெல்லை கொலை

நெல்லை கொலை

கள்ளக்காதலுனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மாமியாரை அவரது மருமகன் வெட்டிப்படுகொலை செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டத்தில் தகாத உறவில் இருந்த மாமியாரை வெட்டிக்கொலை செய்துள்ளார் மருமகன். கொலையின் பின்னணி என்ன?

  நெல்லை மாவட்டம் மூலைக்கரைபட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் 46 வயதான ராஜலட்சுமி .இவரது கணவர் வேலாயுதம் கூலி வேலை செய்து வருகிறார்.இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.மகளுக்கு திருமணமாகி மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தியில் கணவர் அபிமன்யுடன் வசித்துவருகிறார்.

  ராஜலட்சுமி பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளராக உள்ளார்.பணி செய்யும் இடத்தில் ராஜலட்சுமிக்கு 30 வயதான அன்பழகன் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகின்றது.இந்த விவகாரம் மருமகன் அபிமன்யுவிற்கு தெரிந்து ராஜலட்சுமியை கண்டித்துள்ளார்.இருந்தாலும் இளைஞருடனான தொடர்பை தொடந்துள்ளார் ராஜலட்சுமி.

  Also Read:  சாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்

  இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியின் வீட்டு வழியாக சென்ற அபிமன்யு வீட்டில் யாரோ இருப்பதாக நினைத்து உள்ளே சென்றுள்ளார்.அப்போது ராஜலட்சுமியும் அன்பழகனும் தனிமையில் இருந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அபிமன்யு மாமியார் ராஜலட்சுமியையும் அவருடன இருந்த அன்பழகனையும் தாக்கியுள்ளார்.

  Also Read: பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி கைது..! - போலீசிடம் சிக்கியது எப்படி?

  இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவர் வேலாயுதத்திற்கு போன் செய்து நடந்ததைக் கூறி வரவழைத்துள்ளார்.விரைந்து வந்த வேலாயுதம், ஆத்திரத்தில் மனைவி மீதும், காதலன் அன்பழகன் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த நிலையில் அபிமன்யு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டியதுடன், இளைஞரையும் வெட்டியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி சம்ப இடத்திலையே துடிதுடித்து உயிரிழந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, வேலாயுதமும், அபிமன்யுவும் அங்கிருந்து தப்பியோடினர்.சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்து காயத்துடன் கிடந்த அன்பழகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து தப்பியோடிய ராஜலட்சுமியின் மருமகன் அபிமன்யுவைவும், வேலாயுதத்தையும் கைது செய்தனர்.அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐயப்பன்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Illegal affair, Illegal relationship, Murder case