Home /News /tamil-nadu /

3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

நெல்லை பள்ளியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திருநெல்வேலி நகரின் திருநகர் பகுதியில் அமைந்துள்ள டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 மாணவர்கள் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விளையாட்டு பாடவேளையில் மைதானத்தில் விளையாட வந்தபோது கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததால் இந்த சோக விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது- சாப்டர் பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநிர் கழிக்க சென்றபோது கழிப்பிட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தும் 4 மாணவர்கள் சிகிச்சையிலும் உள்ளனர். சிறப்புக்குழு அமைத்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, தனியார் பள்ளியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் வழங்கவும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சமும் வழங்க தமிழக அரசு உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க : நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி

    நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளியான டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் கட்டிட ஸ்திரத் தன்மை பாதிப்புக்குள்ளானதாகவும், அதனை உரிய நேரத்தில் ஆய்வு செய்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    நெல்லை பள்ளியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Tirunelveli

    அடுத்த செய்தி