23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி - 72 வயதில் கைது செய்த போலீஸார்

பச்சாந்து

கொலை வழக்கில் தண்டனை பெற்று 23 வருடங்கள் தலைமறைவாக இருந்த கைதியை கேரளாவில் வைத்து நெல்லை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை அம்பாசமுத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கெளதமபுரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சாத்து (72)  கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதியை அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையிலான சிறப்பு படையினர் கேரள மாநிலம் தொடுபுழா பகுதியில் கைது செய்தனர்

  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கெளதம புரி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சாத்து (72). இவர் 1992 ம் ஆண்டு பட்ட முத்து என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1995 ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட பச்சாத்துவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பச்சாத்து மேல்முறையீடு காலத்தில் ஜாமீனில் இருந்து வந்துள்ளார். மேல் முறையீட்டு தீர்ப்பு 1998 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் கீழமை நீதிமன்ற தீர்ப்பை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

  தனது தண்டனை உறுதி செய்யப்பட்டதை அறிந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். 1998 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி எதிரிக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் பிடிபடாமல் இருந்ததால் இன்று வரை நீடித்து வந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் ,அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தனிப்படை அமைத்து பசுவைத் தேடி வந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் பச்சாத்துவை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றிட தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். பச்சாத்து உறவினர்கள் ஒரு சிலரிடம் விசாரனை நடத்திய போது அவர் மனைவியிடம் செல்போன் மூலமாக பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து களமிறங்கிய தனிப்படையினர் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் தொடுபுழாவில் தனியார் விடுதியின் காப்பாளராக பெயரை மாற்றி கொடுத்து பணிபுரிந்து வந்த பச்சாத்து வை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

  வழக்கு நடந்து வந்த திருநெல்வேலி முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர் அவரை நீதிபதி சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டதை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 23 ஆண்டுகள் தலைமறைவாகிருந்த குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள நிகழ்ந்த நிலையில் நம்மை யாரும் அடையாளம் கண்டு கொன்ற முடியாது என நினைத்திருந்த பச்சாத்து காவல் துறையிடம் மாட்டி தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

  செய்தியாளர்:  சிவமணி (நெல்லை)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: