• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'மத்திய அரசு வேணும்னே செஞ்ச மாதிரி இருக்கே' - எம்.பி விஜய் வசந்த் பாய்ச்சல்

'மத்திய அரசு வேணும்னே செஞ்ச மாதிரி இருக்கே' - எம்.பி விஜய் வசந்த் பாய்ச்சல்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கண்டனத்துக்குறியது.

  • Share this:
    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்தது கண்டனத்திற்குறியது. மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து சட்டங்களை கொண்டுவருவது ஜனநாயக விரோதமானது என நெல்லையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களது சிலைகளை மாற்றி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில்   கொக்கிரகுளம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

    Also Read:  ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

    இதில்முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மீனவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தும் மத்திய அரசு  மறுக்கிறது. விவாதத்திற்கு வரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் தான் ஈடுபடுவோம்.

    Also Read:  மரங்களை வேறுடன் பிடுங்கிய அதிகாரிகளின் செயலுக்கு இயற்கை ஆர்வலர்கள் கண்டனம்!

    சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் விவாதம் நடத்தி தான் கொண்டு வர வேண்டும் ஆனால் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து கொண்டு எதிர்க்கட்சிகளை போராட்டம் நடத்தி வெளியே அனுப்பிவிட்டு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இது ஜனநாயக விரோதமானது என தெரிவித்தார்.

    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:

    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கண்டனத்துக்குறியது. மத்திய அரசு வேண்டுமென்றே இதுபோன்று செய்வதைபோல இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்கான ஹெலிகாப்டர் தளம் மற்றும் மீனவர்களுக்கான சாட்டிலைட் போன் அலைவரிசையின் திறனை அதிகரித்து தர அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக தமிழகம் வருவோரை கண்காணிக்க கூடுதல் பரிசோதனை மையங்கள் அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஐயப்பன், செய்தியாளர் - திருநெல்வேலி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: