• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெல்லையில் இரவில் கொட்டிய கனமழை.. வீடு இடிந்தது.. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை

நெல்லையில் இரவில் கொட்டிய கனமழை.. வீடு இடிந்தது.. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை

Rain

Rain

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது

  • Share this:
    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இரவில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டையில் பெய்த மழையால் மழைநீர் தேங்கியது. கொக்கிரகுளம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஓட்டு வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது. அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் செல்வதால் அதில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் இரவிலும் தொடர்ந்து கனமழையால் முக்கிய நகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையிலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    Also read:  ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது நெல்லை மாவட்டத்திற்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது

    மழையின் தாக்கம் நேற்று காலை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மதியம் முதல் கனமழை பெய்யத் தொடங்கியது மழையின் தாக்கம் இரவிலும் நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது முக்கிய நகர் பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

    Also read: 2050ல் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

    விடு இடிந்தது:

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்தது. நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த ஓட்டு வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது.

    அணைகள் நிரம்புகின்றன:

    தொடர்ந்து மழை குறித்தும் அதன் பாதிப்பு குறித்தும் கண்காணிப்பு செய்யும் பணியில் வருவாய் மற்றும் பேரிடர் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: