Home /News /tamil-nadu /

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சியதார்த்தம்.. ஆத்திரத்தில் ஊர் முழுவதும் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டிய காதலன்..

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சியதார்த்தம்.. ஆத்திரத்தில் ஊர் முழுவதும் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டிய காதலன்..

தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் இருந்த விஜய்ரூபனுக்கு காதலியின் நிச்சயதார்த்த செய்தி தெரிய வரவும், கடும் ஆத்திரமடைந்தவர்,

    காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயமான ஆத்திரத்தில் காதலியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு காதலன் அவர் ஊர் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். விஜய்ரூபன் மேலபத்தை பகுதியைச் சேர்ந்த சொந்தகார பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண செய்ய பெண் கேட்டபோது, திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனிடையே, நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்ரூபன் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்.

    இதையும் படிங்க: போர் வரும் என நினைக்கவில்லை: தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி

    ஏற்கனவே, தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் இருந்த விஜய்ரூபனுக்கு காதலியின் நிச்சயதார்த்த செய்தி தெரிய வரவும், கடும் ஆத்திரமடைந்தவர், காதலியுடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் அவர் கொடுத்த கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அடித்து, களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டியுள்ளார். குறிப்பாக அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் அந்த சுவரொட்டியை ஓட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை செய்து விஜய்ரூபனை தேடி வருகின்றனர்.

    தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய் ரூபன் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nellai, Tirunelveli

    அடுத்த செய்தி