ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லையில் பைனான்சியர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. போலீஸார் தீவிர விசாரணை

நெல்லையில் பைனான்சியர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. போலீஸார் தீவிர விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நெல்லையில் பைனான்சியர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் நபர் வீட்டில் முகம் சிதைக்கப்பட்டு கொலை. தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. முருகன் என்ற முருகானந்தத்தின் மனைவி தனது உறவினர் வீட்டுக்கு கணவரிடம் சொல்லி விட்டு சென்று இரவில் வீடு திரும்பிய நிலையில் வீட்டிற்குள் முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் முருகானந்தம் கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார்.

  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முருகானந்தம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் குறித்து தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்தில் ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டன்ர். தாழையூத்து காவல் நிலையத்தில் கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: ஐயப்பன் (திருநெல்வேலி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Murder, Police