கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு நாட்டுக்கோழி முட்டைகள் பரிசு.!

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முட்டை பரிசு

கோழி பண்ணை உரிமையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் தடுப்பூசி போட்ட 207 பேருக்கும் இலவசமாக நாட்டுக்கோழி முட்டை செட் பாக்ஸ்களை வழங்கினார்.

 • Share this:
  நெல்லையில் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு நாட்டுக் கோழி முட்டை  செட் இலவசமாக வழங்கப்பட்டது.

  நெல்லை மாவட்டத்தில் கொரோணா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது 50 நாட்களுக்கு பிறகு நோய் தொற்று பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்துள்ளது 850 ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்ட நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 400 க்கும் கீழ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  நோய்தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என 3,000 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது இந்த நிலையில் 13 லட்சத்து 19 ஆயிரத்து 234 பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 1,54, 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1, 25,000 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர் 30 ஆயிரம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

  Also Read:   ஸ்டம்பை தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசனுக்கு இது தான் தண்டனையா?

  10  நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் மையங்கள் மூடப்பட்டன இன்று நெல்லை மாவட்டத்திற்கு 7800 கோவிஷீல்டு, 1000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. 84 மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது

  இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வது வார்டு காந்திநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் த முகாம் அமைத்து தடுப்பூசியை மக்களுக்கு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று காந்தி நகரில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

  Also Read:   குதிரையுடன் ஓட்டப்பந்தயம் வைத்த தோனி.. சாக்‌ஷி பகிர்ந்த வைரல் வீடியோ!

  மக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சம் நீங்கி தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஊசி போட்டுகொண்ட ஒவ்வொருவருக்கும் நாட்டுக்கோழி முட்டை ( ஆறு முட்டைகளை கொண்ட ஒரு செட் ) இலவசமாக வழங்கப்பட்டது.

  காந்தி நகரில் மலர் நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் தடுப்பூசி போட்ட 207 பேருக்கும் இலவசமாக நாட்டுக்கோழி முட்டை செட் பாக்ஸ்களை வழங்கினார். முதலில் ஒரு மணி நேரத்தில் 30 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இலவசமாக நாட்டுக்கோழி முட்டை என நூதன முறையில் மக்களை அணுகியதால் 3 மணி நேரத்தில் 207 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு நாட்டுக்கோழி முட்டைகளையும் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். இது போன்று 2 ஆயிரம் நிவாரணத்தையும் பயன்படுத்தலாம் என அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2 ஆயிரம் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை பெற டோக்கன் வழங்குவதை விடுத்து தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கே முன்னுரிமை என அறிவித்தால் இலக்கை எளிதில் அடைய முடியும் கொரோனா இல்லாத தமிழகத்தை விரைவில் உருவாக்க முடியும் என நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

  சிவமணி - நெல்லை செய்தியாளர்
  Published by:Arun
  First published: