ஜி.எஸ்.டி மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் - போலீசாரிடமிருந்து தப்பி ஓட்டம்!

திமுக பிரமுகர்

காவல்துறை பாதுகாப்பில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி ராஜா இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.

 • Share this:
  போலி பில்கள் தயாரித்து கொடுத்து ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த நெல்லையை சேர்ந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

  நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் இவரது மகன் பெரிய ராஜா என்ற  எஸ்.பி ராஜா.   பாகிஸ்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். தமிழகத்தில்  சிமெண்ட் விலையை விட வெளிநாட்டு சிமெண்ட் விலை குறைவாக இருந்ததால் விற்பனை சிறப்பாக நடந்ததாக தெரிகிறது.

  Also Read: பொது மன்னிப்பு வழங்குகிறோம், பணிக்கு திரும்புங்கள் – அரசு ஊழியர்களுக்கு தாலிபான்கள் உத்தரவு

  இதனிடையே இவர் GST வரியை குறைவாக கட்டுவதற்காக   உள்ளீடு வரி  தொடர்பாக பலருக்கு  போலி பில்கள் தயாரித்து கொடுத்ததாக தெரிகிறது. அதில் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பும்  ஏய்ப்பும் மோசடியும் நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்  வணிக வரித்துறை ஜி.எஸ்.டி பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர் அதில் எஸ்.பி.ராஜா  சட்ட விரோதமாக  6 கோடியே 50 லட்சம் வரி  மோசடி செய்தது தெரிய வந்தது.

  இந்நிலையில் நெல்லை மாவட்ட வணிக வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ராஜா மீது அரசுக்கு  இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் வணிகவரித்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரிடம்  விசாரணை நடத்தியதை அடுத்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

  Also Read:  ‘ட்விட்டர் பறவை’யை பொறித்து டெல்லிக்கு பார்சலில் அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் – வீடியோ!

  உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக  மருத்துவ பரிசோதனை செய்ய  திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எஸ்பி ராஜா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செல்லும் வழியில்  தனக்கு நெஞ்சு வலிப்பதாக ராஜா  அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது.  ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும் அரசு  ராஜா மருத்துவரிடம் தெரிவித்த நிலையில்  மருத்துவமனையில் உள் நோயாளியாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

  Also Read:   தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!

  காவல்துறை பாதுகாப்பில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி ராஜா இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.   இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள்  நெல்லை ஹைகிரவுண்ட்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்  புகார் பெற்று வழக்கு பதிவு செய்த ஹைகிரவுண்ட் காவல் நிலைய போலீசார்  தப்பியோடிய எஸ் பி ராஜாவை தீவீரமாக தேடி வருகின்றனர்.

  குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். கடந்த  ஒரு சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக மேலும் சில புகார்கள் நிலுவையில் உள்ளதாக வணிக வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்

  பி.எஸ்.சிவமணி - செய்தியாளர், திருநெல்வேலி
  Published by:Arun
  First published: