ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடர் மழைக்கு இடையே தீபாவளி உற்சாக கொண்டாட்டம் : வானில் ஒளிர்ந்த பட்டாசுகள்

தொடர் மழைக்கு இடையே தீபாவளி உற்சாக கொண்டாட்டம் : வானில் ஒளிர்ந்த பட்டாசுகள்

வானில் ஒளிர்ந்த பட்டாசு

வானில் ஒளிர்ந்த பட்டாசு

தீபாவளியில், வானில் ஒளிர்ந்த பட்டாசுகளால், இருள் சூழ்ந்த மேகத்திற்கு ஒளி ஏற்றியது போல வானம் ஒளிர்ந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே புத்தாடைகள் அணிந்து இனிப்புகளை நண்பர்கள் உறவினர்களுக்கு பரிமாறி கொண்டாடுவது மட்டுமல்ல பட்டாசுகள் வெடிப்பது தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

தமிழகத்தில், தொடர் மழைக்கு இடையே தீபாவளி உற்சாக கொண்டாட்டம் தொடர்ந்தது.  ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சரவெடி பட்டாசுகள் வடிப்பதற்கு மட்டும் நீதிமன்றம் தடை விதித்தது மேலும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவிதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீபாவளி வியாபாரமும் பாதிக்கப்பட்டது.  தீபாவளி திருநாளில் காலை முதல் மழையின் தாக்கம் குறைந்து ஓரளவு வெயில் அடித்ததால் காலையில் பட்டாசுகள் கொடுக்கவும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் எளிதாக இருந்தது.

ஆனால் மதியத்திற்கு மேல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பொழிய துவங்கியது இதன் காரணமாக ஒளிரும் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் பலரும் திணறினர் மழையின் வேகம் 7 மணிக்கு பிறகு  குறைந்த  நிலையில், 7 மணிக்கு  பட்டாசுகளை கொளுத்தி ஒளிர விட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பலர் ஒளிரும் பட்டாசுகளை கொளுத்தியதால் வானமே வண்ணமயமாக காட்சியளித்தது.

மழை சற்று ஓய்வெடுத்த நிலையில், இருள் சூழ்ந்த மேகத்திற்கு ஒளி ஏற்றியது போல வானம் ஒளிர்ந்தது. பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் குறிப்பிட்ட கால அளவில் வெடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் வானம் இருள் சூழ்ந்து மழையை கொட்டி பட்டாசுகளை வெடிக்க தடை போட்ட போதிலும், கிடைத்த சிறிது நேரத்தில் பொதுமக்கள்பட்டாசுகளால் வானத்தை ஒளிர விட்டனர்.

Must Read : இவ்வளவு குறைவா? பெட்ரோல், டீசல் போட புதுச்சேரிக்கு படையெடுக்கும் தமிழக வாகன ஓட்டிகள்!

தொடர் மழைக்கு இடையே தீபாவளி மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். வானில் ஒளிரும் பட்டாசுகளை  அதிக அளவில் வெடித்து மகிழ்ந்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Published by:Suresh V
First published:

Tags: Diwali, Diwali festival