திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக இருந்தபோது கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியில் பணி செய்யாத ஒப்பந்தக்காரர் கணக்கில் 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரவு வைத்து பணத்தை மோசடி செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஆரோக்கியதாஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் லயோலா ஆரோக்கியதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை உதவி திட்ட அலுவலர் சுமதி நடத்தி வந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது அறிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருநெல்வேலி உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த செப்டம்பர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடை பெற்றது. இந்த நிலையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் வாழ வந்த கணபதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது கணவர் இதே ஊராட்சியில் செயலாளராக செப்டம்பர் மாதம் வரை பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த காண்ட்ராக்டர் இசக்கிமுத்து என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென பணி 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அரசு பணம் வரவு வைக்கப்பட்டதை அறிந்துள்ளார். தனது திசையன்விளை வங்கி கிளைக்கு சென்று மேலாளரிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
ALSO READ | 'ஒரிஜினல் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் ' - பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை
அதே நேரத்தில் ஊராட்சி உதவியாளர் பாலசுப்பிரமணியன் இசக்கிமுத்துவை தொடர்புகொண்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 12 லட்சம் பணத்தை எடுத்து தன்னிடம் கொடுக்குமாறு கோரியுள்ளார். ஊராட்சி கணக்கில் இருந்து பணம் வந்துள்ளது தவறுதலாக வந்திருக்கலாம் அதனால் நீங்கள் தற்போது பணத்தை எடுக்க வேண்டாம் என வங்கியில் இருந்து இசக்கிமுத்து விடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பணத்தை எடுக்காமல் அவர் திரும்பிவிட்டார். தொடர்ந்து பாலசுப்பிரமணியன் தரப்பிலிருந்து பணத்தை எடுத்து தர கூறி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து ஒரு புகார் மனுவை அளித்து இருந்தார்.
சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி ஊராட்சி உதவியாளர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன் ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஊராட்சி பணத்தை எடுத்து மற்றவர்கள் வங்கி கணக்கில் ஊராட்சி உதவியாளர் வரவு வைக்க முடியாது. வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை ஊராட்சி உதவியாளரை மட்டும் பணியிடை நீக்கம் செய்தது சரிதானா என்ற கேள்வி எழுந்தது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி உதவியாளர் ஆகியோருக்கு அரசியல் தொடர்பு ஏதும் உள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ALSO READ | சென்னையில் 90 விழுக்காடு பேருந்துகள் ஓடவில்லை.. பொதுமக்கள் அவதி..
இவை தவிர வேறு ஏதேனும் பண பரிமாற்றம் செய்யப்பட்டு கையாடல் செய்யப்பட்ட இருக்கிறதா? என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் அதோடு பணம் கையாடல் இல் ஈடுபட்ட ஊராட்சி உதவியாளர் மட்டுமின்றி அதற்கு துணை புரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் தவறு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் கஸ்தூரிரெங்கபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான விசாரணை மாவட்ட ஊராட்சி முகமை உதவி திட்ட அலுவலர் சுமதி நடத்தி வந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. அவரது அறிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லயோலா ஆரோக்கியதாஸ் பணி நீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிதி திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என எண்ணத்தில் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பணிகளை செய்யாமல் இதுபோன்று கையாடல் செய்யும் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ALSO READ | பகீர் நகைக்கடன் முறைகேடு : தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர், தலைவர் தற்காலிக பதவி நீக்கம்
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து ஒப்பந்தக்காரர் கணக்கிலிருந்து ஊராட்சி மன்ற கணக்கிற்கு பணம் மீண்டும் பணம் எடுக்கப்பட்டு விட்டது ஒப்பந்தக்காரர் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எடுத்து உதவியாளரோடு பங்கு போட்டிருந்தால் இது குறித்த தகவல் வெளியே தெரியாமலே போயிருக்கும் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இச்சம்பவம் வெளிவந்துள்ளது. இதுபோன்று வேறு ஊராட்சிகளில் கையாடல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்று மாவட்ட ஆட்சியர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : P.S. சிவமணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirunelveli