ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குப்பையோடு குப்பையாக 40வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக்கொலை?- நெல்லையில் அதிர்ச்சி

குப்பையோடு குப்பையாக 40வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக்கொலை?- நெல்லையில் அதிர்ச்சி

திருநெல்வேலி

திருநெல்வேலி

நெல்லை பேட்டை அருகே சாலை ஓரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் ஆதாம் நகர் என்ற பகுதி உள்ளது. நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான குழாய்கள் ஆதம் நகர் எல்லை பகுதியில் உள்ள வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கே பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இதன் காரணமாக குப்பை மேடாக அந்த பகுதி காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதிய வேளையில் அவ்வழியாக சென்ற ஒரு சிலர் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதை கண்டு பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

  இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில ஆட்டோவில் மர்ம நபர்கள் சிலர் ஒரு பெண்ணின் உடலை அந்தப்பகுதியில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

  Also Read: காதலனுடன் மனைவி எஸ்கேப்... மாமனார் புகாரால் சிறையில் கம்பி எண்ணும் கணவன்...

  எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் துணி ஒன்று இருக கட்டியிருந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். நெல்லை மாநகர தடவியல் நிபுணர் குழுவினர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்து சென்றுள்ளனர் மேலும் ஆதம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  கழுத்தில் துணி இறுக கட்டி எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருந்த பெண் யார் இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐயப்பன் ( நெல்லை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Attempt murder case, Crime News, Death, Death probe, Murder case, Police investigation, Tamil News, Thirunelveli