நெல்லையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடக்கம்; ஒரு டோஸ் விலை ரூ.1,568

ரெம்டெசிவிர் விற்பனை

மருந்தை பெற்றுக் கொள்வதற்கு மருத்துவரின் பரிந்துரைக்கடிதம், கொரோனா பரிசோதனை சான்றிதழ், சிடி ஸ்கேன் சான்று, பாதிக்கபட்டவரின் ஆதார் எண் மற்றும் மருந்து வாங்க வருபர்களின் ஆதார் எண் ஆகியவை அவசியமாகும்.

 • Share this:
  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு உத்தரவுப்படி ரெம்டெசிவர் மருந்து விற்பனைத் தொடங்கியது. கல்லூரி முதர்வர் டாக்கர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

  நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதுபோன்று நெல்லை மாவட்டத்திலும் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 20 நாட்களாக மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு போடப்படும் ரெம்டெசிவர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

  அரசு மருத்துவமனையில் போடப்பட்டு வந்தாலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கான கொரோனா தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு இந்த மருத்து கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

  இந்த மருந்து சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் கள்ளச்சந்தைகளில் ஒரு ஊசி மருந்து பாட்டில் 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிக அளவில் பணம் கொடுத்தும் மருந்து கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.  இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரெம்டெசிவர் மருத்து அரசு மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் விற்பனை மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள முதல்வர் உறைவிட கட்டிடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு என குழு மையக்கப்பட்டு மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.

  ரெம்டெசிவிர் விற்பனை


  மருந்து விற்பனையை மருத்துவக்கல்லூரி மருத்துவர் டாக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். விற்பனை தொடங்கிய நிலலயில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று மருந்தினை வாங்கி சென்றனர். கொரோனா அதித பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு உத்தரவுப்படி ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுகிறது.

  மருந்தை பெற்றுக் கொள்வதற்கு மருத்துவரின் பரிந்துரைக்கடிதம், கொரோனா பரிசோதனை சான்றிதழ், சிடி ஸ்கேன் சான்று, பாதிக்கபட்டவரின் ஆதார் எண் மற்றும் மருந்து வாங்க வருபர்களின் ஆதார் எண் ஆகியவை அவசியமாகும். ஒரு டோஸ் விலை ரூ.1,568 ஆகும். 6 பாட்டில்கள் கொண்ட பேக்கேஜ் விலை 9408 ரூபாயாகும். அரசு மருத்துவமனையில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை விற்பனை நடைபெறும்.

  செய்தியாளர் - ஐயப்பன்
  Published by:Esakki Raja
  First published: