ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் - மாவட்ட ஆட்சியர்

நெல்லையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் - மாவட்ட ஆட்சியர்

நெல்லை

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் கொரோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்யை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் இதுவரை மாவட்டத்தில் முகவசம் அணியாமல் , சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என 41 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  மேலும் நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, கூடுதலாக 3000 ஆயிரம் மருத்துகள் வந்துள்ளது. தற்போது 2-வது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஊசி போடப்பட்டு வருகிறது. வட மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் , மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் , சிப்காட் ஆகிய இடங்களில் அந்ததந்த நிறுவன வளாகத்தில் தனியாக பரிசோதனை முகாம் நடத்தப்படும், பரிசோதனை முடிவுகள் கண்டறியும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.

  அதுபோன்று நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படுவதால் உயிரிழப்பு என்பது இல்லை இந்த ஊசி பல்வேறு சோதனைகளுக்கு பின்பே மக்களுக்கு போடப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முறைகள் 100 சதவீதம் பின்பற்றப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் - ஐயப்பன்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, Covid-19, Tirunelveli