நெல்லையில் அதிகரிக்கும் கொரோனா: திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி தீவிரம்!

நெல்லையில் அதிகரிக்கும் கொரோனா: திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி தீவிரம்!

திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி தீவிரம்

நெல்லையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாநகராட்சி திருமண மண்டபங்களில் கூடுதலாக புதிய படுக்கைகள் போடப்பட்டு சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 • Share this:
  நெல்லையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாநகராட்சி திருமண மண்டபங்களில் கூடுதலாக புதிய படுக்கைகள் போடப்பட்டு சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அனுமதியாகி சிகிச்சை பெறும் அளவில் வசதிகள் உள்ளது.

  எனினும், தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்கள் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 500 படுக்கைகள் காலியாக உள்ளது. இருந்த போதும் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதுடன் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக வருவதால், மருத்துவமனை தவிர்த்து வெளியிடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

  இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு 100 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இதுபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபங்களை படிப்படியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  செய்தியாளர் - ஐயப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: