ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்..

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்..

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மோதல்

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மோதல்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மோதல் விவகாரம் காரணமாக பத்து நாட்கள் கல்லூரியை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்  250  மாணவர்கள் சேர்க்கப்பட்டு  பயின்று வருகின்றனர். 50 ஆண்டுகளை கடந்த பழமையான பெயர் பெற்ற கல்லூரியாக இந்தக் கல்லூரி விளங்கி வருகிறது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு அருகாமையில் கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விடுதியில் மாணவர்கள் மது விருந்து கொண்டாடியதாக தெரிகிறது. இதில் நான்காம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச்சம்பவத்தில் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் வெவ்வேறு சமூகமாக பிரிந்து மோதிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு  விளக்கம் கேட்டுள்ளனர். காயமடைந்த இரண்டாம் ஆண்டு  மாணவனை அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Also Read:  மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு - தமிழக அரசு

அதனைத் தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகக் குழுவினர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் எவ்வித புகாரும் தெரிவிக்காத நிலையில் தங்களுக்கு இடையே மோதல் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் மோதல் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து கல்லூரிக்கு பத்து நாட்கள் விடுமுறை அளித்து முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதோடு வெளியூர்களிலிருந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் விடுதியை காலி செய்து உடனடியாக வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே சாதிய மோதல்கள் அதனை தொடர்ந்து தொடர் கொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொண்டனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அதுபோன்ற சூழல் மருத்துவக் கல்லூரியிலும் நடக்க துவங்கி உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. யாரும் புகார் அளிக்காத நிலையிலும் தாமாக முன்வந்து காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மாணவர்கள் இடையே மோதலை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அதோடு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு விட்ட நிலையிலும் பெரும்பாலான மாணவர்கள் விடுதியை காலி செய்யாமல் அங்கேயே தங்கி உள்ளனர். வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் காலையில் விடுதியை காலி செய்து செல்வார்கள் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Medical College, Medical Students, News On Instagram, Police, Tirunelveli