Home /News /tamil-nadu /

திருநெல்வேலியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

திருநெல்வேலியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Tirunelveli District : திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 747 பசுக்கள் மற்றும் 4311 எருமைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 58 குழந்தைகளுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டுக்கான 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 1.43 லட்சம் கால்நடைகளுக்கான தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி பணியை கண்கணிக்க உதவி மருத்துவர்கள் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. கோமாரி நோய் ஏற்பட்டால் பிளவுபட்ட குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்கி பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே 2025 ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோயை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் கோமாரி நோய் தடுப்பூசி இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    ஆண்டிற்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடங்கியது.



    பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஊராட்சிமன்றத் தலைவர் சுடலைக்கண்ணு தொடங்கி வைத்தார்.



    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 747 பசுக்கள் மற்றும் 4311 எருமைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 58 குழந்தைகளுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



    எனவே இத்திட்டத்தை பயன்படுத்தி கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசி போடும் குழுக்கள் வரும் போது தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி அளித்து நோய் தாக்காமல் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    செய்தியாளர் : ஐயப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirunelveli

    அடுத்த செய்தி