கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை பாதுகாத்து வருகிறார் - சபாநாயகர் அப்பாவு
கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை பாதுகாத்து வருகிறார் - சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Tirunelveli District : பெண்களுக்கு கல்வி வழங்கி சமூக நீதியை பாதுகாப்பதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பெரும் பங்கு வகிப்பதாக தமிழக சபாநாயகர் சாராள்தக்கர் கல்லூரி ஆண்டுவிழாவில் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை பாதுகாப்பதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பெரும்பங்கு ஆற்றி வருகிறது என்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை பாதுகாத்து வருகிறார் என பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியின் 127-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார் .
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியின் 127-வது ஆண்டு விழா நெல்லை திருமண்டல பேராயர் பர்பனபாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிப் பேசுகையில் நூற்றாண்டு கடந்த பழமையும் பெருமையும் வாய்ந்த கல்லுரி விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .
மக்கள் மீது அக்கறை கொண்டு அறியாமை இருளைப் போக்கும் வகையில் சாராள்தக்கர் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு கல்வி வழங்கி சமூக நீதியை பாதுகாப்பதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்து வருகிறது. பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து முத்தமிழ் கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை பாதுகாத்து வருகிறார் . பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசு திமுக படிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை , பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என ஏராளமான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார் .
தொடர்ந்து கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , களக்காடு நகராட்சி துணை தலைவர் பி.சிராஜன் , மாவட்ட கவுன்சிலர் சாலமன்டேவிட் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஐயப்பன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.