Home /News /tamil-nadu /

சுவர் இடிந்து விபத்திற்குள்ளான சாஃப்டர் பள்ளிக்கு, 3 மாதங்களுக்கு முன்பு “சரியாக உள்ளது” என்று தகுதிச் சான்றிதழ்

சுவர் இடிந்து விபத்திற்குள்ளான சாஃப்டர் பள்ளிக்கு, 3 மாதங்களுக்கு முன்பு “சரியாக உள்ளது” என்று தகுதிச் சான்றிதழ்

நெல்லை பள்ளி விபத்து

நெல்லை பள்ளி விபத்து

நெல்லை மாநகராட்சி சார்பில், விபத்திற்குள்ளான சாஃப்டர் பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நெல்லையில் விபத்திற்குள்ளான சாஃப்டர் பள்ளிக்கு, மூன்று மாதங்களுக்கு முன்புதான் "சரியாக உள்ளது" என்று தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் செயல்படும் சாஃப்டர் என்ற அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் கடந்த வெள்ளிக்கிழமை இடிந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ஸ்திரத்தன்மை குறைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள 96 கட்டிடங்கள் பலம் இழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கீழக்கூடலூர் என்ற பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியின் கட்டடம் பழுதடைந்திருப்பதால், அதனை இடிக்கும் பணி நடைபெறுகிறது. கட்டடம் இடிக்கும் பணியில் இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

    இந்த நிலையில், 56 பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு வரும் 31-ம் தேதிக்குள் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல, தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 70 பழுதான அரசுப் பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றன. இயந்திரங்களைக் கொண்டு பழுதான கட்டடங்கள் அனைத்தும் துரிதமாக அப்புறப்படுத்தப்பட்டன.

    இதனிடையே, மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே, நெல்லையில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த சாஃப்டர் பள்ளிக்கு அண்மையில் தான் கட்டட உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்படி, நெல்லை மாநகராட்சி சார்பில் பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரச் சான்று அளித்துள்ளனர்.



    Read More : குற்றால அருவியில் குளிக்க 9 மாதங்களுக்கு பிறகு அனுமதி

    இந்த சுகாதார சான்றுக்கு தேவையான தீ தடுப்பு சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று போன்றவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகராட்சி சுகாதார பிரிவு வழங்கிய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Must Read : முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

    மேலும், இந்தப் பள்ளிக்கு தீயணைப்பு துறை சார்பில் தடையில்லாச் சான்று கடந்த ஜனவரி மாதமும், வருவாய்த்துறை சார்பில் மூன்று வருடம் செல்லுபடியாகும் வகையிலான கட்டிட உறுதி சான்று கடந்த 2019ஆம் ஆண்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: School, Thirunelveli

    அடுத்த செய்தி