ஊரடங்கால் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கும் பாஜக எம்எல்ஏ!

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் பாஜக எம்எல்ஏ

நெல்லை மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் அம்மா உணவகங்களில் விநியோகிக்கப்படும் உணவுக்கான முழுதொகையும் தான் செலுத்துவதாக மாநாகராட்சி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்களுக்கு இலவசமாக அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க நெல்லை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.

    கொரனா ஊரடங்கு கடந்த 10 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் வெளியூர்களில் இருந்து வந்து வேலைபார்த்து வரும் பலர் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல், வேலையும் இழந்து தவித்து வருகின்றனர். அவ்வாறு தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தில் இருந்து கூலி தொழிலுக்காக பலர்  வந்து தங்கியுள்ளனர்.மேலும் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வந்த பலரும் தற்போது உள்ள ஊரடங்கால் பணிக்கு செல்லமுடியாமல்  உள்ளனர். இந்த சூழலில் உணவு உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலை கருத்தில் கொண்டு அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நேரடியாக உணவு விநியோகத்தை பாஜகவினர் செய்து வந்த நிலையில், பலருக்கு உணவு வழங்க முடியாத சூழல் உருவானது.

    இந்த நிலையை கருத்தில் கொண்டு நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏவும், பாஜகவின் மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் அம்மா உணவகங்களில் விநியோகிக்கப்படும் உணவுக்கான முழுதொகையும் தான் செலுத்துவதாக மாநாகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

    Also Read:  திரைப்படத்தை மிஞ்சிய பாலியல் விவகாரம்; நெல்லை சட்டக் கல்லூரி பேராசிரியர் தலைமறைவு!

    அதனை தொடர்ந்து நெல்லை சட்டமன்ற தொகுதியான நெல்லை டவுண், தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் இயங்கும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

    காலை மதியம் 2 வேலைகளிலும் உணவை இலவசமாக தேவைக்கேற்ப வழங்க பாரதி ஜனதா கட்சி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாநகராட்சி நிர்வாகம் அம்மா உணவகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ஐயப்பன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: