Home /News /tamil-nadu /

வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் குடும்பத்தினர்

வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் குடும்பத்தினர்

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

சுவாமி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான இடம், ,திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருடைய கட்டிடம், டான்சி நிறுவன கட்டிடம், சிறு குறு தொழில் நிறுவன இயக்குனர் அலுவலக கட்டிடம், சிட்கோ வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி கட்டாமல் வரி பாக்கி வைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    திருநெல்வேலியில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

    நெல்லை மாநகராட்சிக்கு சொத்து வரி அதிகமாக பாக்கி வைத்துள்ளவர்களின் முதல் 50 பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  முதற்கட்ட பட்டியலில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி வைத்தவர்களின் 50 பேர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு ₹1.39 கோடி வரி பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுவாமி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான இடம், ,திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருடைய கட்டிடம், டான்சி நிறுவன கட்டிடம், சிறு குறு தொழில் நிறுவன இயக்குனர் அலுவலக கட்டிடம், சிட்கோ வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி கட்டாமல் வரி பாக்கி பல ஆண்டு களாக நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி இன்று ஆஜர்

    நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருடைய கட்டிடத்திற்கு ரூ.2.89 லட்சம் வரி பாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை வசூலிப்பதற்காக மார்ச் மாதத்தில் விடுமுறை இல்லாமல் வரி வசூல் நடைபெற்றது. சுமார் 10 கோடி ரூபாய்க்கு மார்ச் மாதத்தில் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Nainar Nagendran, Property tax, Thirunelveli

    அடுத்த செய்தி