ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற்றதில்லை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற்றதில்லை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது கிடையாது.இந்த தேர்தலை நியாயமாக நடைபெறுமா எனபது சந்தேகம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தி.மு.க கூட்டணி எண்ணிக்கை அளவில் தான் பலமாக உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் முடிந்த பின்னர் தான் மக்களின் எண்ணங்கள் தெரியவரும். கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.

  ஓரிரு நாட்களில் எந்தெந்த இடங்களில் போட்டி என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நிலையில் தசரா போன்ற திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

  தமிழக அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இந்து விரோத போக்கையே காட்டுகிறது. நீட் தேர்வு வைத்து தி.மு.க அரசியல் செய்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தகுதி தேர்வு என்பது நடைபெற்று வருகிறது. தகுதித்தேர்வை நீக்க முயற்சிக்காமல் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி பாடத் திட்டத்தை தி.மு.க அரசு மாற்றி அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்

  Published by:Karthick S
  First published:

  Tags: Nainar Nagendran