• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை - 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாபநாசம் அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை - 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாபநாசம் அணை

பாபநாசம் அணை

பாபநாசம் அணை

2011 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  • Share this:
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் முதன்மையாக விளங்குவது பாபநாசம் அணையாகும். 143 அடி உயரமும் 5,500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய  தேவையை பூர்த்தி செய்வதோடு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் சில பகுதிகள், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த அணை இருப்பதால் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவ மழை காலங்களிலும் மழைப்பொழிவை பெறுவதால் எப்பொழுதும் செழிப்பான பகுதியாகவே இருந்து வருகின்றது .

இந்த நிலையில் பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

Also Read: "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் தெற்கு கோடை மேலழகியான் நதியுன்னி திருநெல்வேலி கால்வாய் பாளையங் கால்வாய் மருதூர் கால்வாய் உள்ளிட்ட 11 கால்வாய்கள் தண்ணீர் வசதி பெறுகிறது அதிலிருந்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும் தூத்துக்குடி மாவட்டத்தில் 46  ஆயிரத்து 107 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தற்போது விவசாய நிலங்கள் 75 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது.

கார் பருவ சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பாபநாசம் அணையிலிருந்து ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையை பொருத்தவரை குறைந்த அளவு தண்ணீர் இருப்பு இருந்தாலும் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் பாபநாசம் அணை தங்களை கைவிடாது என விவசாயிகள் நம்புகின்றனர்.இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணையில் இருந்து சரியான நேரத்தில் ஜூன் 1ஆம் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீரான இடைவெளியில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தாலும் கடந்த வாரம் யாஷ் புயலின் காரணமாக மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று நாட்களில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. மே மாதத்தில் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி இருப்பது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை இந்த ஆண்டு முழுமையாக வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: