நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவர் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

நெல்லையில் ரெம்டெசிவர் மருந்து  நாள் ஒன்றுக்கு 60 நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில், சுற்றியுள்ள 5 மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்தை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 • Share this:

  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  நாளொன்றுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிபப்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை இல்லாத நிலை காணப்படுகிறது.

  மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவர் மருந்துக்கும்  கடும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. இதனை பெற பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நெல்லை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனை  தொடங்கியுள்ளது.

  நெல்லையில் சனிக்கிழமை விற்பனை துவங்கிய நிலையில் நேற்று மருந்து இருப்பு இல்லாததாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால், இன்று காலை முதலே ஏராளமானோர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முன்பாக மருந்து பெற காத்திருந்தனர்.  கால தாமதமாக 11 மணி அளவில் மருந்து வந்த நிலையில் அதற்கான விற்பனை துவங்கியது.

  நுரையீரல் பாதிப்பு பத்து புள்ளிகளுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே மருந்து விற்பனை செய்யப்படுகிறது, குறைவாக இருப்பவர்களுக்கு மருந்து வழங்கப்படவில்லை.  மேலும், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி  உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்து மருந்துகளை வாங்க திருநெல்வேலி வர வேண்டியுள்ளது. அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் மருந்து விற்பனை செய்தால் நோய்த்தொற்று பாதித்த பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் என நோயாளிகளின் உறவினர்கள் கருத்து தெரிவித்தனர்.

  நாளொன்றுக்கு 60 நபர்களுக்கு மட்டுமே ஆறு ஊசிகள் கொண்ட பெட்டகம் வழங்கப்படுகிறது. இதனால் மருந்து தேவைப்படுவோர் மருத்துவக்கல்லூரி முன்பு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: