ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 12 மாணவ - மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 12 மாணவ - மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 12 மாணவ - மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 12 மாணவ - மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், 12 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் இரண்டாவது அலை தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் 13-ந்தேதி மருத்துவப்படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் மருத்துவத் துறை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் 16-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் இல்லை மருத்துவ கல்லூரிகள் சித்த மருத்துவக்  மருத்துவக் கல்லூரிகள், சித்த மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

Also read: வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!!

அடுத்த சில நாட்களில் மருத்துவத் துறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், நேரடி வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நேற்று முன்தினம் 99 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 4 மாணவிகளுக்கு  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நான்கு பேரும் நெல்லை அரசு சித்த  மருத்துவக்கல்லூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாக உள்ள நிலையில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து நேற்று  172  மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வந்துள்ள நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு தினங்களில் மட்டும் 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை யில் உள்ள உள்நோயாளிகள், புற நோயாளிகள் என 400க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  நேரடி வகுப்புகள் தேவைப்பட்டால் சமூக இடைவெளியோடு நடத்தலாம் என்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியோடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்முறை தேர்வுகள் சமூக இடைவெளி யோடு நடத்தப்படும் என்றும் சித்தமருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களில்  12 மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் தொற்று பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழக அரசு கலை, அறிவியல் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிகளை செப்.1ம் தேதி முதல் திறக்க உள்ள நிலையில், சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு முன்னெறிக்கை நடவடிக்களை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Esakki Raja
First published:

Tags: College, Govt School, TN Govt