தனிமையில் இருந்த காதலர்களை தாக்கி பணம், செல்போன் பறிப்பு - ரகசிய வீடியோவால் பிடிபட்ட கும்பல்
நெல்லையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சந்தித்த காதல் ஜோடியை மிரட்டி பணம், செல்போன் பறித்த நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
- News18
- Last Updated: August 10, 2020, 9:22 AM IST
நெல்லை மாநகரின் புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதி ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியாகும். மாலை நேரங்களில் பைக் ரேஸ் பிரியர்கள், காதல் ஜோடிகள் அங்கு சென்று வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் எல்லை மீறியதாக தெரிகிறது. இதை மறைந்திருந்து பார்த்த சிலர் அவர்கள் அருகில் சென்று இருவரையும் பிடித்து தரையில் அமர வைத்துள்ளனர்.
யார் என விபரங்களை கேட்டு வீட்டில் சொல்லிவிடுவதாக துன்புறுத்தி உள்ளனர். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த அந்த மிரட்டல் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
நடந்ததை வெளியில் சொன்னால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுதாக மிரட்டியதால், காதல் ஜோடி அதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். ஆனால் மிரட்டல் கும்பல், காதலர்களை மிரட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது.
இது காவல்துறை கவனத்திற்கு செல்ல, வீடியோவில் அவர்கள் சொன்ன பெயர் முகவரியை வைத்து விசாரித்தனர். காதலரின் வீட்டுக்கு சென்று அவரிடம் நடந்த சம்பவம் உண்மையா? என்பது குறித்து விசாரித்தனர்.சம்பவம் உண்மைதான் என அவர் கூறியதும், மிரட்டல் நபர்கள் மீது புகார் ஒன்றை பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.
மிரட்டலில் ஈடுபட்டவர்கள் கீழ் முன்னீர்பள்ளத்தை சேர்ந்த அருணாச்சலம் உள்ளிட்ட மூவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அருணாச்சலத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து காதலர்களிடம் பறித்த செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். மேலும் மிரட்டலில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.