நெல்லை & தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 208 கோடி மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

நெல்லை & தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று கார் மூலம் நெல்லை மாவட்டம் சென்றார். அங்கு ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாமிரபரணி, நம்பியாறு, கறுமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4ஆம் நிலைப்பணிகளை முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதேபோன்று தென்காசிமாவட்டத்தில் ஊர்மேல் அழகியான் குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் உட்பட 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் படிக்க...உலகளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 19 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் 5,982 பயனாளிகளுக்கு 36 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப்பட்டா, அம்மா இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும், குடிமராமத்து பணிகள் பெருமாளவு முடிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.தாமிரபரணி, நம்பியாறு, கறுமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading