நெல்லை அரசு மருத்துவமனை இதயவியல் பிரிவில் படுக்கை இல்லை... நோயாளிகளை தரையில் அமரவைத்து சிகிச்சை

நெல்லை அரசு மருத்துவமனை இதயவியல் பிரிவில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

  • Share this:
நெல்லை அரசு மருத்துவமனை இதயவியல் பிரிவில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருநெல்வேலியில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டு நீங்கலாக முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு விட்டதால் புதிதாக செயல்பட துவங்கியுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.அதோடு மற்ற முக்கிய சிகிச்சையான இதயவியல் பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட சிகிச்சைகளும் பல்நோக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சைவழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்னோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வரும் இதயவியல் பிரிவில் இடம் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள்  வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு படுக்கை வசதி செய்து தரப்படவில்லை. இதயவியல் அவசர சிகிச்சை தேவைப்படும் ஆக்ஸிஜன் அளிப்பது வென்டிலேட்டர் போன்ற  அவசர தேவை ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை.

Also read... திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்இவ்வாறு அவசர உதவி கருவிகள் ஏதும் இல்லாமல் தரையில் வைத்து சிகிச்சை அளிப்பது நோயாளி உயிருடன் விளையாடும் செயலாக அமைவதக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.தமிழக முதல்வர், நெல்லைக்கு  வர உள்ள நிலையில் நெல்லையில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என பேட்டி அளித்திருந்தார். ஆனால் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கூட செய்யப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading