நெல்லையில் 515-வது ஆனிப்பெருந் தோ்த்திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 515-வது ஆனிப்பெருந் தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Web Desk | news18
Updated: July 14, 2019, 12:08 PM IST
நெல்லையில் 515-வது ஆனிப்பெருந் தோ்த்திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்
நெல்லையப்பர் ஆலயத்தில் தேர்த்திருவிழா
Web Desk | news18
Updated: July 14, 2019, 12:08 PM IST
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 515-வது ஆனிப்பெருந் தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நெல்லையப்பர் அம்பாள் கோயிலில், கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 450 டன் எடைகொண்ட நெல்லையப்பர் தேர், சுவாமி சன்னதியிலிருந்து புறப்பட்டது.

அம்பாள், விநாயகர் , முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 4 தேர்களும் சன்னதியில் இருந்து புறப்பட்டன. பெரும்பாலும், மற்ற கோயில் தேரோட்டத்தின் போது ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு தேர் இழுக்கப்படும்.

ஆனால், நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் சக்தியுடன் மட்டுமே தேர் இழுக்கப்படும்.. காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கிய நிலையில், ஓம் நமச்சிவாயா, அம்மையப்பா என்ற முழக்கங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

4 வீதிகள் வழியாக தேர் பிற்பகலில் மீண்டும் நிலையை வந்தடையும். அதன் பின்னர் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.

தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகர காவல் ஆணையர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர பகுதிகளில் போக்குவரத்தில் சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Loading...
Also  Watch: நிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2!

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...