• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன?

தாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன?

Youtube Video

ஒரு காதல் திருமண விவகாரத்தில் அடுத்தடுத்து பழிக்குப்பழி கொலைகள் அரங்கேறி வருகிறது. தற்போது காதல் திருமணம் செய்தவரின் தாய் மற்றும் சகோதரியை வெட்டிக் கொலை செய்த கும்பல், தலையை ஊர் நடுவே வைத்துவிட்டு சென்றுள்ளது.

 • Share this:
  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சி பகுதிக்குள், சனிக்கிழமை நண்பகல் 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முகக்கவசம் அணிந்து நுழைந்தது. அங்குள்ள அருணாச்சலம் என்பவரது மகள் சாந்தி வீட்டிற்கு சென்றுள்ளது. அந்த கும்பல் சாந்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியும், கழுத்தை அறுத்தும் அவரை கொடூரமாக கொலை செய்தது. பின்னர், அருணாச்சலம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளது.

  அப்போது அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓடியுள்ளார். அவரது மனைவி சண்முகத்தாய் வீட்டின் கழிவறையில் போய் ஒளிந்துள்ளார். வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசிய கும்பல் சண்முகத்தாயை வெளியில் இழுந்து தலையை துண்டித்து கொலை செய்தது. பின்னர் தலையை ஊர் முனையில் வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சாந்தி மற்றும் சண்முகத்தாய் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் காயமடைந்த சாந்தியின் 3 வயது மகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  முதல்கட்ட விசாரணையில், மறுகால்குறிச்சியை சேர்ந்தவர்கள் அருணாசலம்-சண்முகத்தாய் தம்பதி. இந்த தம்பதிக்கு சாந்தி என்ற மகளும் நம்பிராஜன் என்ற மகனும் இருந்தனர். நம்பிராஜன் அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகள் வான்மதியை காதலித்துள்ளார்.

  கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி வான்மதியை திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் டவுன்வயல் தெருவில் வைத்து நம்பிராஜன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

  படிக்க...மணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைப்படங்கள் வெளியீடு

  நம்பிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்களான ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை நம்பிராஜன் தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாகவே சனிக்கிழமை நண்பகல் மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி ஆகியோர், வான்மதி குடும்பத்தினரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

  இதை அடுத்து நாங்குநேரி சுங்கசாவடி சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு காதல் திருமணத்தால் அடுத்தடுத்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தற்போது நடந்துள்ள இரட்டைக்கொலையால் கலவரம் ஏற்படாமல் தடுக்க மறுகால்குறிச்சி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் தப்பிய அருணாச்சலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் எதிரிகள் முருகன், செல்லத்துரை, சிவசுப்பு, செல்வம் உள்பட 12 பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த நாங்குநேரி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் கூலிப்படையினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: