ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலவச தரிசனம் கிடையாது.. 11 மணி நேரம் மூடப்படும் திருப்பதி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

இலவச தரிசனம் கிடையாது.. 11 மணி நேரம் மூடப்படும் திருப்பதி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி

திருப்பதி

நாளை சந்திரகிரகணம் நடைபெறவுள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாளை சந்திரகிரகணம் நடைபெறவுள்ளதால் 11 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

  நாளை சந்திரகிரகணம் நிகழவுள்ளதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் அந்த நேரத்துக்கான கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திருப்பதி தேவஸ்தானம், ''தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. ரூ.300 தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்படும். அதற்கு பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்'' என குறிப்பிட்டுள்ளது

  இதையும் படிங்க: கொசுக்களை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா.. வழக்கு விசாரணையில் பரபரப்பு!

  சந்திரகிரகணம்

  பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

  ​​முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, ​​அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது.

  இரத்த-சிவப்பு நிலவு :

  சந்திர கிரகணத்தின் போது, ​​சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது.

  முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

  வட/கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.

  இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும், கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Lunar eclipse, Thirumala