திருச்சி ரயில்வே மருத்துவமனையில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!

திருச்சி ரயில்வே மருத்துவமனையில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!

ரயில்வே மருத்துவமனை

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 10க்கும் குறைவாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 300க்கும் மேல் என பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து அரசு, தனியார்  மருத்துவமனைகள் மட்டுமின்றி, பல்கலைக்கழகம் & கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு & தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

இதுவரை திருச்சியில்  மொத்தம் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 5.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது  என்று திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கோவாக்சின் இல்லை என்பதால், பலருக்கும் 2வது தவணை தடுப்பூசி செலுத்த முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நாம் கேட்டதற்கு,*கோவாக்சின் பற்றாக்குறையாகத்தான் இருந்தது. தற்போது 3000 ஆயிரம் தடுப்பூசிகள் திருச்சிக்கு வந்துள்ளன.* இதில், 1000 தடுப்பூசிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் தொடர்ந்து மாநகராட்சி, மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவாக்சின் &  கோவிஷீல்டு இரண்டும்  போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கூடுதல் தடுப்பூசியும் ஓரிரு நாட்களில் வந்து விடும். எனவே பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது குறித்து நீயூஸ் 18 இன்று காலை தொலைக்காட்சி நேரலையிலும், இணையதளத்திலும் செய்தி பதிவு செய்தது.

தடுப்பூசி பற்றாக்குறை அறிவிப்பு குறித்த செய்தி வெளியானதும், மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த  அறிவிப்பை ரயில்வே மருத்துவமனை ஊழியர்கள் அவசர அவசரமாக அகற்றினர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள தடுப்பூசி தொகுப்பில் இருந்து பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கு முதல் கட்டமாக 100 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேவைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசி வரவழைக்கப்படும் என்றும் தற்போது தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணி வழக்கம் போல் நடைபெறுகிறது என்றும் பொன்மலை ரயில்வே மருத்துவமனை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published: