திருச்சியில் பராமரிப்பு பணிகளுக்காக பாகக்கரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரியம் கோட்டம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பலக்கரை, கண்டோன்மேண்ட் பிரிவுக்கு உட்பட்ட ஆழ்வார் தோப்பு, காஜா தோப்பு, ஸ்டீல் தோப்பு, கே.எம். நகர், சாகிர் உசேன் தெரு, இதயாத் தெரு, சின்னச்சாமி நகர், புதுரெட்டி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு,பக்காளை தெரு, பீம நகர், பொன் விழா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி நகரியம் மின் செயற்பொறியாளார் பிரகாசம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.